திரு.சிந்தக அபேவிக்ரம அவர்கள் அம்பாறை மாவட்டச் செயலாளராக தனது கடமைகளை 2023 ஜூன் 10 ம் திகதி மாவட்டச் செயலகத்தில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் தனது நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் அரசாங்க கொள்கைகளை செயற்படுத்தல் பொதுமக்களின் தேவைகள் பிரச்சினைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளையும் கடமைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக செயலாளர் வீ.ஜெகதீசன் உதவி மாவட்ட செயலாளர் திரு.விமன்ச செனவிரத்ன, சமூர்த்தி பணிப்பாளர், பிரதம கணக்காளர், கணக்காளர், கணக்காய்வாள தலைவர், புள்ளிவிபரவியலாளர்,செயற்பாட்டு திட்டடமிடல் பணிப்பாளர் அம்பாறை மாவட்ட அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அம்பாறை மாவட்ட அரச உத்தயோகத்தர்கள் அரச சார்பற்ற உத்தியாகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு புதிய மாவட்ட செயலாளரை அன்புடன் வரவேற்றனர்.











(ஷெஹணி தில்ருக்ஷிகா - அம்பாறை மாவட்ட ஊடகப் பரிவு | தமிழ் மொழி பெயர்ப்பு – தரணிதரன் )





